Posts

அபகரி

Image
க ரையோர மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாகப் பெய்த மழையில் கொஞ்சம் சேற்றுத்த னமான நிறத்தைப் பூசிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றங்கரையில் கல்மண்டபத்தின் கலைத்திறனை மெச்சுவார் யாரும் அப்போது அங்கிருக்கவில்லை. அவரவர்களின் உடுதுணிகளைத் துவைக்க இடம் பிடிக்கவும், குளிக்கத் தடம் தேடவுமே நேரம் பத்தவில்லை. மனம்போக்கில் காலியான சீயக்காய் பாக்கெட்டுகளும், கிழிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு உறைகளும் படித்துறையெங்கும்  சிதறிக்கிடக்க எதைப் பற்றியும் அக்கறைகொள்ளாமல் அதன் போக்குக்குச் சென்று கொண்டிருந்தது தாமிரபரணி.  கிழக்கு வட்டம் வெளிச்சம் கண்கூசச் செய்துகொண்டிருந்தது.  மந்திரம் இன்னும் அந்தப் பக்கம் வந்த மாதிரி தெரியவில்லை.  ‘குறுக்குத்துறை முருகனுக்கே இந்நேரம் அர்ச்சனை நடந்து முடிந்திருக்கும். இன்னும் இந்தக் கட்டையன் மந்திரத்தைக் காணோமே... எங்க போய் தொலைந்திருப்பான்...’ என்ற யோசனையோடு, படித்துறைக்கே வந்து சேர்ந்தார் ஆறுமுகம்.  விடிகாலையிலேயே வெளுப்புகளை ஆரம்பித்து, கஞ்சியைக்  குடித்துமுடித்துவிட்டு ஏப்பம் தீரப் புல் தரையில்  உட்கார்ந்திருந்த சங்கரனைப் பார்த்ததும், அவனிடம் விசாரி

காந்தல்

Image
“ரோ ரோ ரோ எங்கம்மல்லோ… அழாதீங்கம்மோ…”    சகுந்தலாவின் அந்தப் பலவீனமான தாலோலத்தையும் மீறி, அவளின் ஒன்பது மாதப் பெண் குழந்தை வீல்வீலென்று அழுகைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. அவள் நின்றுகொண்டிருந்த அந்த நீண்ட வரிசை முன்னே நகர்கிற மாதிரி தெரியவில்லை. தாய், சேய் இருவரின் அடிவயிறுகளையும் சுரண்டிக்கொண்டிருந்தது பசி. நேற்றைக்கு பொழுது கவிழ்ந்த நேரத்தில், அரிசிப்பெட்டியில் கடைசியாக மிஞ்சிருந்த குருணையைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்திருந்தாள் அவள். பிள்ளைக்கு மீனாப் பாட்டி கடையிலிருந்து இரவில் கொடுத்துவிட்டிருந்த இட்டிலிகளை ஊட்டிவிட்டிருந்தாள். இப்போது அதெல்லாம் எந்த மூலைக்கு…   இரண்டு மூன்று மாதங்களாகவே இதே கதைதான். ஊரெங்கும் காலரா பரவி ஜனங்கள் சுருண்டுகிடந்தார்கள். ஜனக்கூட்டத்தால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன.  ‘எட்டாங்கிளாஸ் படிச்ச பொம்பளைப் புள்ளைகளை எழும்பூர் ஆஸ்பத்திரியில வேலைக்கு எடுக்குறானுங்களாம்...’ என்று ரிக்‌ஷா வண்டியோட்டும் மூர்த்தியண்ணன், நேற்றிரவுதான் நரியங்காட்டுச் சனங்களிடம் சொல்லிச் சென்றிருந்தார். காலையிலேயே பேங்கர் வீட்டுக்குப் பத்துப் பாத்திரம் தேய்க்கப் பு

வெட்டும் பெருமாள்

Image
மு ருகைய்யன் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட கருவேலமர நிழலில் குப்புறப் போடப்பட்டிருந்த ஆட்டு உரல் மீது தன் துண்டை உதறி, தூசு தட்டிவிட்டு வெயில் கொஞ்சம் தாழட்டும் என உட்கார்ந்தார். இடுப்பில் கட்டியிருந்த பட்டை பெல்ட்டின் பட்டன் திறப்பை நெம்பி காய்ந்து கிடந்த பீடியை வாய்க்குக் கொடுத்து பற்ற வைத்தவாறே நெற்றியைச் சுருக்கி இடது கையை கண்ணுக்கு நிழல் கொடுத்தார். தூரத்தில் வைக்கோல் கட்டோடு சைக்கிளை உருட்டிக்கொண்டு வரும் காமதேனு கோனாரை நோக்கி சத்தம் கொடுத்தார். “என்ன கோனாரே... அடிக்குதது வெய்யிலா..? பனியா..? சட்டகிட்ட ஒண்ணும் மேலுக்குப் போடாம சைக்கிளத் தள்ளிட்டு வாரீரவே” “சட்ட என்ன சட்ட, வெய்யக்காலம் வரும்மின்ன இந்தப்போடு போடுதுங்கேன்” “செத்த உக்காருமைய்யா இப்புடி” “ஓவ்... பொழுதுக்குப் போய் மாட்டுக்கு கூளங்காட்டணும்லா” என்றபடிடே தலையிலிருந்த வைக்கோல் பாரத்தைக் கீழே வீசிவிட்டு நிதானமானா காமதேனு கோனார்.  “சொம மாடு வெச்சுத் தூக்கியாற இதொண்ணும் யெடை கூடுன சமாச்சாரமுங் கெடையாது” “ஏஞ்சொல்லமாட்டீரு... ரெண்டு ஊருக்கும் தூக்கிட்டு நடந்தீருன்னா தெரியும்...”  “ஆமா... எங்க இங்கனக்கூடி வெக்கப்போர் ஒண்ணயுங் க

கலகம் பிறக்குது

Image
கா டு காடாக பருத்தி வெடித்துக் கிடந்தது களத்தூர் கிராமம். அதிகாலைப் பனி வாட்டம் நின்றுபோய் ஊரின் மீது வெளிச்சம் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. வடக்கூர் குடியிருப்பில் அந்த நேரத்திலே கடும் சலசலப்பு துவங்கியிருந்தது. தெருக்களின் முனையில் அசைபோட்டுக் கிடந்த கன்றுகாலிகள் என்னமோ ஏதோ என்று எழுந்து நின்றுகொண்டு திக்குதிசை தெரியாமல் மிரண்டு விழித்தன.  முருகன் கோயில் திடலில் வாட்டசாட்டமான இளைஞர்கள் சிலபேர் ஓங்கி ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிங்கன் செட்டியும் கந்தையாவும் கழுவனும் தவிர மற்றவர்கள் அவ்வளவாகப் பரிச்சயமில்லாத முகங்கள். கூட்டத்தாருக்கு, அடுத்து ஆகவேண்டியது என்னென்ன என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்க, சித்திரங்குடிக்காரர் மயிலன் சேர்வை தன் கருப்புக் குதிரையோடு பாய்ச்சலாக வந்திறங்கினார்.  ஆஜானுபாகுவான தோற்றம். அரையில் மடிப்புவேட்டி. வார் பிலுட்டு, தோல் செருப்பு, அடையாளத்தை மறைக்கும்படி தலைப்பாகையின் ஒரு பிரியால் முகத்தை அரைச் சுற்றுக்கு மூடியிருந்தார். இடுக்கில் தெரிந்த கண்களில் செங்குளவியைப் போல மின்னும் பார்வை. ஈட்டியும் வல்லயமும் பிடித்து