Posts

Showing posts from March, 2022

ஜில்லா விலாஸம்

Image
கொ ல்லம் - செங்கோட்டை வழியாக மதராஸ் ராஜதானிக்குச் செல்லும் புகையிரதம் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க திருநெல்வேலி வீரராகவபுரம் தண்டவாளத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது . தண்டவாளத்திற்குக் கீழ்ப்புறமுள்ள ரயில்வே ஃபீடர் சாலையில் சாரிசாரியாக வண்டிமாடுகள் பாரச் சுமைகளோடு நகர்ந்து கொண்டிருந்தன . நாடுமுழுக்க சுதேசி கோஷம் பரவலாகி , சுப்பிரமணிய சிவமும் , சிதம்பரம் பிள்ளையும் கைதாகி , மொத்த ஊரும் அல்லோலப்பட்டபோது ,   இதே சாலையில்  இந்துக் கல்லூரி மாணவர்கள் திரளாகக் குவிந்து ஹர்தால் பண்ணிக் கொண்டிருந்தார்கள் .   பாளையங்கோட்டை பூனிடிவ் போலீசாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை . இந்துக் கல்லூரி முதல்வரையும் , பாரி சாராய ஆலையைச் சேர்ந்த அவரது நண்பரையும் பொதுஜனம் மிரளடிக்கச் செய்து ஓட ஓட விரட்டிய காட்சியும் , அன்று நடந்த கல்லெறிச் சம்பவமும் , கீழரதவீதி முனிசிபல் ஆபீஸ் எரிப்பும் , அதன் தொடர்ச்சியாக நடந்த துப்பாக்கிப் பிரயோகமும் , அதில் கொல்லப்பட்ட சிறுவன் முகமும் பக்கம் பக்கமாக  பேப்பரில் வந்தது . அந்தச் சம்பவத்திற்குப் பிறகுதா