Posts

Showing posts from September, 2023

அபகரி

Image
க ரையோர மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாகப் பெய்த மழையில் கொஞ்சம் சேற்றுத்த னமான நிறத்தைப் பூசிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றங்கரையில் கல்மண்டபத்தின் கலைத்திறனை மெச்சுவார் யாரும் அப்போது அங்கிருக்கவில்லை. அவரவர்களின் உடுதுணிகளைத் துவைக்க இடம் பிடிக்கவும், குளிக்கத் தடம் தேடவுமே நேரம் பத்தவில்லை. மனம்போக்கில் காலியான சீயக்காய் பாக்கெட்டுகளும், கிழிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு உறைகளும் படித்துறையெங்கும்  சிதறிக்கிடக்க எதைப் பற்றியும் அக்கறைகொள்ளாமல் அதன் போக்குக்குச் சென்று கொண்டிருந்தது தாமிரபரணி.  கிழக்கு வட்டம் வெளிச்சம் கண்கூசச் செய்துகொண்டிருந்தது.  மந்திரம் இன்னும் அந்தப் பக்கம் வந்த மாதிரி தெரியவில்லை.  ‘குறுக்குத்துறை முருகனுக்கே இந்நேரம் அர்ச்சனை நடந்து முடிந்திருக்கும். இன்னும் இந்தக் கட்டையன் மந்திரத்தைக் காணோமே... எங்க போய் தொலைந்திருப்பான்...’ என்ற யோசனையோடு, படித்துறைக்கே வந்து சேர்ந்தார் ஆறுமுகம்.  விடிகாலையிலேயே வெளுப்புகளை ஆரம்பித்து, கஞ்சியைக்  குடித்துமுடித்துவிட்டு ஏப்பம் தீரப் புல் தரையில்  உட்கார்ந்திருந்த சங்கரனைப் பார்த்ததும், அவனிடம் விசாரி