Posts

Showing posts from January, 2022

பச்ச...

Image
“யாத்தி இவன் கெடக்கமாட்டாம் போலய...” “ஏம்ட்டீ ஊரைக் கூட்டிட்டுக் கெடக்க காலேலே” “நா ஏங் கூட்டப்போறேன். இந்தா வந்து நிக்கப்போறால்லா, ஒங்க மொறைக்கி பொண்ணு பெத்துப் போட்டவ. அவா வந்து கனைப்பா. அப்ப கேளு ஏம்ட்டீன்னு...” “இப்போ என்னான்னு சொல்லிட்டு கனைக்கியா இல்லையா?” “பாரும் இங்க வந்து, ஓம் மருமவம் கைய. மூஞ்சில நல்லா முடி மொளைக்கல, பயவுள்ள என்ன வேலை செஞ்சிட்டு வந்து தூங்குதான்னு பாரு” வேணி காலையிலேயே வீட்டைக் கூட்டும் போது, நாதன் தூங்கி எழுந்திருக்கவில்லை. பாயில் படுத்துக் கிடந்தவனைச் சுற்றி வாரியலைச் சுழற்றித் தூற்றுக் கொண்டிருக்கும்போதுதான் அவன் கையைக் கவனித்தாள். அதற்குப் பிறகே, அவள் காட்டுக் கூச்சல்கேட்டு ரவி எழுந்துவந்து, நாதனின் கையை உற்றுப் பார்த்தான். “எட்டிக்கிட்டு நாலு மிதி மிதிப்பீயன்னு பார்த்தா... இங்கன வந்து பல்ல வௌக்கிட்டு நிக்கியே..” வேணி தீர்மானமாய் ஒரு சண்டைக்கு தயாராய் நின்றாள். “என்னைய என்ன செய்ய சொல்லுத. அவன் எந்திரிக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்” “தாயில்லாப் புள்ளைன்னு கொஞ்ச வேண்டியதுதான். அதுக்குன்னு இப்படியா? அவம் யாரு பேரை பச்ச குத்திக்கிட்டு வந்திருக்காம்ன்னு தெரி