Posts

Showing posts from November, 2022

கலகம் பிறக்குது

Image
கா டு காடாக பருத்தி வெடித்துக் கிடந்தது களத்தூர் கிராமம். அதிகாலைப் பனி வாட்டம் நின்றுபோய் ஊரின் மீது வெளிச்சம் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. வடக்கூர் குடியிருப்பில் அந்த நேரத்திலே கடும் சலசலப்பு துவங்கியிருந்தது. தெருக்களின் முனையில் அசைபோட்டுக் கிடந்த கன்றுகாலிகள் என்னமோ ஏதோ என்று எழுந்து நின்றுகொண்டு திக்குதிசை தெரியாமல் மிரண்டு விழித்தன.  முருகன் கோயில் திடலில் வாட்டசாட்டமான இளைஞர்கள் சிலபேர் ஓங்கி ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிங்கன் செட்டியும் கந்தையாவும் கழுவனும் தவிர மற்றவர்கள் அவ்வளவாகப் பரிச்சயமில்லாத முகங்கள். கூட்டத்தாருக்கு, அடுத்து ஆகவேண்டியது என்னென்ன என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்க, சித்திரங்குடிக்காரர் மயிலன் சேர்வை தன் கருப்புக் குதிரையோடு பாய்ச்சலாக வந்திறங்கினார்.  ஆஜானுபாகுவான தோற்றம். அரையில் மடிப்புவேட்டி. வார் பிலுட்டு, தோல் செருப்பு, அடையாளத்தை மறைக்கும்படி தலைப்பாகையின் ஒரு பிரியால் முகத்தை அரைச் சுற்றுக்கு மூடியிருந்தார். இடுக்கில் தெரிந்த கண்களில் செங்குளவியைப் போல மின்னும் பார்வை. ஈட்டியும் வல்லயமும் பிடித்து